விஷ சாக்பீஸ் தின்ற பிளஸ்-2 மாணவன் சாவு
விஷ சாக்பீஸ் தின்ற பிளஸ்-2 மாணவன் உயிரிழந்தான்.
மலைக்கோட்டை
திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி ஏசுராஜின் மகன் ஜோசப் ரூபன் (வயது 16). புத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவனின் தாய் ஜெசிந்தாமேரி சிந்தாமணி பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஆயாவாக வேலை பார்த்து வருகிறார். கொரோனா காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைெபற்று வருகிறது. அந்த ஆன்லைன் வகுப்பை ஜோசப் ரூபன் சரிவர கவனிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்ததாக தெரிகிறது. அதற்கு மாணவர், தனக்கு வேறு செல்போன் வாங்கி தருமாறு வீட்டில் கேட்டுள்ளார். இந்தநிலையில் கரையான், எறும்பு உள்ளிட்ட பூச்சிகள் வராமல் இருப்பதற்காக வீட்டில் கோடு போடும் விஷ சாக்பீசை ஜோசப் ரூபன் தின்று விட்டதாக தெரிகிறது. உறவினர்கள் மாணவனை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோசப் ரூபன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story