பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் விழுதுடையான் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 27). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் தனிமையில் இருந்த 15 வயது சிறுமியை, பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை அறிந்த விளந்தை கிராமத்தை சேர்ந்த சிவகுமார், அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவரது தாய்க்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை ஒரு தத்தெடுப்பு மையத்தில் கொடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான சிவகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story