பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா


பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா
x
தினத்தந்தி 16 Aug 2021 1:44 AM IST (Updated: 16 Aug 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடைபெற்றது.

பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி சைவ நெறிக்குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் சேக்கிழார் பெருமான் ஆகிய ஐவர் சன்னதியில், சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் விதமாக அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story