குமரியில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மது விற்பனை


குமரியில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 16 Aug 2021 1:52 AM IST (Updated: 16 Aug 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மது விற்பனையானது.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மது விற்பனையானது.
மதுபிரியர்கள் கூட்டம்
குமரி மாவட்டத்தில் மொத்தம் 113 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. கொரோனா பரவல் காரணமாக தற்போது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படுகிறது. இந்த மதுக்கடைகள் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை மது விற்பனையாவது வழக்கம். அதுவே பண்டிகை காலம் மற்றும் விடுமுறை நாட்களுக்கு முந்தைய தினம் என்றால் அதிக அளவில் மதுபானம் விற்பனையாகும்.
சுதந்திர தினத்துக்கு விடுமுறை நாள் என்பதால் நேற்றுமுன்தினமே மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இதனால் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
ரூ.5 கோடிக்கு விற்பனை
பீர்வகையை மதுபிரியர்கள் அதிகம் விரும்பியதாக தெரிகிறது. மேலும் பிராந்தி, விஷ்கி, ரம் உள்ளிட்ட மதுபானங்களையும் ஏராளமானவர்கள் வாங்கினர். 
அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்ததாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story