கூடுதல் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்


கூடுதல் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 16 Aug 2021 2:08 AM IST (Updated: 16 Aug 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி பகுதி கொள்முதல் நிலையங்களில் கூடுதல் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி பகுதி கொள்முதல் நிலையங்களில்  கூடுதல் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நெல் கொள்முதல்
தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி கொள்முதலில் பல்வேறு இடர்பாடுகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் சாகுபடி செய்த கோடை நெல் அறுவடை செய்யப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய இந்த பகுதியில் பல்வேறு கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறைந்த அளவில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதால் ஏராளமான நெல்மணிகள் குவிந்து கிடக்கின்றன.
இடர்பாடுகள்
குவித்து வைக்கப்பட்ட நெல்லை விவசாயிகள் காலையில் வந்து காயவைப்பதும் பின்னர் விற்பனை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த 
நெல் குறித்த சிட்டா அடங்கல் ஒரிஜினலை கொடுக்க வேண்டும் என்று தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.   குறுவை தொகுப்பு திட்ட பயன்பெற கிராமநிர்வாக அலுவலர்களிடம் வாங்கிய சிட்டா அடங்கல் நகலை ஏற்க மறுப்பதாகவும் இதனால் கிராம நிர்வாக அலுவலர்களிடம் மீண்டும் சிட்டா அடங்கல் பெறவேண்டியதாக உள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். எனவே நெல் கொள்முதலில் உள்ள இ்டர்பாடுகளை போக்கி கூடுதல் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story