திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 12 பவுன் நகைகள்-வெள்ளி பொருட்கள் திருட்டு


திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 12 பவுன் நகைகள்-வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 16 Aug 2021 2:13 AM IST (Updated: 16 Aug 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 12 பவுன் நகைகள்- வெள்ளி பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 12 பவுன் நகைகள்- வெள்ளி பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 
திருமண மண்டப உரிமையாளர் 
தஞ்சை  மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பிஸ்மி நகர் பகுதியை சேர்ந்தவர்  ஜெய்சங்கர் (வயது55). திருமண மண்டப உரிமையாளர். இவரது மகள் நந்தினி. உதவி தோட்டக்கலை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். 
கடந்த 13-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு 2 பேரும் வெளியூர் சென்றுவிட்டனர். பின்னர் வீடு திரும்பினர். அப்்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 
12 பவுன் நகைகள்-வெள்ளி பொருட்கள்
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது  பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதன்  மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இதுகுறித்து ஜெய்சங்கர் திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி ேதடிவருகின்றனர். 

Next Story