முயல் வேட்டையாடிய 9 பேர் கைது


முயல் வேட்டையாடிய 9 பேர் கைது
x
தினத்தந்தி 16 Aug 2021 2:22 AM IST (Updated: 16 Aug 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே முயல் வேட்டையாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே சிவலார்குளம் விலக்கு அருகே வாலிபர்கள் சிலர் நாய்கள் மூலம் முயல் ேவட்டையாடுவதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சிவலார்குளம் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் சிலர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை பிடித்த போலீசார் விசாரணை நடத்திய போது, சிவலார்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த வேம்பு மகன் பாண்டி (வயது 23), மணக்காடு பகுதியை சேர்ந்த சுந்தர் (30), பாலா, ஆனந்த் (32), தாழையூத்து சங்கர் நகர் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் தடிவீரன், சுந்தரம் மகன் வளதி (20), சரவணன் மகன் இசக்கிப்பாண்டி (25), முருகன் மகன் துரை (29), மாரிமுத்து மகன் தங்கம் (21) ஆகியோர் என்பதும்,  முயல் வேட்டையாடியதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு ஆட்டோக்களையும், இறந்த முயல்களையும் பறிமுதல் செய்து ஆலங்குளம் வனத்துறை அதிகாரி குமாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story