மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்


மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2021 3:22 AM GMT (Updated: 16 Aug 2021 3:22 AM GMT)

நம் நாட்டின் 75-வது சுதந்திர தின விழா மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு-புதுச்சேரி வருமான வரித்துறை தலைமை அலுவலகமான சென்னை நுங்கம்பாக்கம் ஆயக்கர்பவன் வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதன்மை தலைமை கமிஷனர் பி.வி.கோபிநாத் தேசிய கொடியை ஏற்றினார்.

நிகழ்ச்சியின்போது கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்கள் கவுரவிக்கப்பட்டனர். சுதந்திர தின விழாவையொட்டி மரக்கன்றுகளை முதன்மை தலைமை கமிஷனர் பி.வி.கோபிநாத் நட்டு வைத்தார்.

துறைமுகம், இந்தியன் ஆயில்

சென்னை துறைமுக வளாகத்தில் துறைமுக தலைவர் ப.ரவீந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், துறைமுக வளாக தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் துறைமுக துணைத்தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார், தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அதன் தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்தியன் ஆயில் பவன் (ஐ.ஓ.சி.) அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தெற்கு மண்டல செயல் இயக்குனர் கே.சைலேந்திரா தேசிய கொடியை ஏற்றினார். அப்போது தமிழ்நாடு-புதுச்சேரிக்கான செயல் இயக்குனர்-தலைவர் பி.ஜெயதேவன் மற்றும் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மாநில தேர்தல் ஆணையம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் கமிஷனர் வெ.பழனிகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் எ.சுந்தரவல்லி, முதன்மை தேர்தல் அதிகாரிகள் க.அருண்மணி (ஊராட்சிகள்), கு.தனலட்சுமி (நகராட்சிகள்), நிதி ஆலோசகர் கோ.ஜெய்குமார், தலைமை நிர்வாக அதிகாரி வி.மைதிலி, உதவி கமிஷனர் அகஸ்ரீ சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மெர்க்கன்டைல் வங்கி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் சுதந்திர தின விழா, வங்கியின் தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.ராமமூர்த்தி தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

வங்கியின் துணை தலைவர், பொதுமேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி, துணை பொதுமேலாளர்கள், உதவி பொதுமேலாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைமை பொதுமேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா தேசிய கொடி ஏற்றினார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனர்- தலைமை செயல் அதிகாரி பார்தா பிரதீம் செங்குப்தா தேசிய கொடியை ஏற்றினார். அப்போது நிர்வாக இயக்குனர்கள் அஜய்குமார் ஸ்ரீவத்ஷா, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் உடன் இருந்தனர்.

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜெ.விஜயா ராணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மெட்ரோ ரெயில் நிறுவனம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர்கள் சுஜாதா ஜெயராஜ் (நிதி), ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), டி.அர்ச்சுனன் (திட்டங்கள்) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி வளாகத்தில் டி.ஐ.ஜி. தினகரன் தேசிய கொடி ஏற்றினார்.

மணலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் (பொறுப்பு) ராஜீவ் அல்வாடியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

மாநகராட்சி ரிப்பன் மாளிகை

பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தேசிய கொடியை கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சியில் அதிக சொத்துவரி செலுத்தியவர்கள், உரிய காலக்கெடுவுக்குள் சொத்துவரி செலுத்தியவர்களுக்கும், பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 35 மாணவ-மாணவிகளுக்கும் கமிஷனர் ககன் தீப் சிங் பேடி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். சுயஉதவி குழுவுக்கு வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கான காசோலையை வழங்கினார்.

மேலும் அவர், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க உறுதுணையாக இருந்த 20 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களுடன், நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த் (பணிகள்), விஷு மஹாஜன் (வருவாய்), டாக்டர் எஸ்.மனிஷ் (சுகாதாரம்), டி.சினேகா (கல்வி), வட்டார துணை கமிஷனர்கள் ஷரண்யா அரி (மத்தியம்), சிம்ரன் ஜீத் சிங் காஹ்லோன் (தெற்கு) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

போக்குவரத்து கழகம்

சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில் மேலாண்மை இயக்குனர் அ.அன்பு ஆபிரகாம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் வருவாய் நிர்வாக கமிஷனர் க.பணீந்திர ரெட்டி தேசிய கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்டக்கமிஷனர் ந.வெங்கடாச்சலம், பேரிடர் மேலாண்மை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன், நில நிர்வாக கமிஷனர் எஸ்.நாகராஜன், வருவாய் நிர்வாக இணை கமிஷனர் ஆர்.சீத்தாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர் கண்ணன், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் முதன்மை செயலரும், தொழிலாளர் கமிஷனருமான அதுல் ஆனந்த், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனர் ஏ.சிவஞானம், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் வாரிய தலைவர் எம்.அப்துல் ரஹமான் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

கல்வி நிறுவனங்கள்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி, டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் கோ.சுகுமார் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வேந்தர் ஐசரி கே.கணேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இணைவேந்தர் (திட்டம்-வளர்ச்சி) ஆ.ஜோதிமுருகன் சுதந்திர தின வரலாறு குறித்து சிறப்புரை ஆற்றினார்.

போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் துணைவேந்தர் பி.வி.விஜயராகவன் தேசிய கொடியை ஏற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் காணொலி வாயிலாக பங்கேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாச்சலம், பாரதியாரின் கொள்ளுப்பேரன் வி.அர்ஜூன் பாரதி, தேசிய சிந்தனை கழகத்தின் தமிழ்நாடு அமைப்பாளர் மா.பொ.சி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை வி.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கம் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அவரை சென்னை வி.ஐ.டி. உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விஸ்வநாதன் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.

விழாவில் சென்னை வி.ஐ.டி. இணை துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், இயக்குனர்கள், டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story