வருவாய்த்துறை அலுவலகங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அலுவலர்கள்
வருவாய்த்துறை அலுவலகங்களில் அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
தேனி:
மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் அலுவலர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
தேனி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் சுமார் 300 அலுவலர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். 2-வது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற உள்ளனர்.
Related Tags :
Next Story