அனுக்குமலை ஊராட்சியில் நேரடி கொள்முதல் நிலையம்
வேட்டவலம் அடுத்த அணுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் ஏர் உழுதார்.
வேட்டவலம்
வேட்டவலம் அடுத்த அணுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் ஏர் உழுதார்.
நேரடி நெல்கொள்முதல் நிலையம்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த அணுக்குமலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குறுவை சாகுபடிக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இன்று கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விவசாயிகளிடம் பேசிய அவர் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது.
கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தவிர மற்றவர் யாரும் தவறான வழியில் இங்கு நெல் மூட்டைகளை போட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஏர் ஓட்டினார்
மேலும் புதிதாக விவசாயிகளுக்கு ஒரு செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த செயலி மூலம் பதிவு செய்யும் விவசாயிகள் தங்களது பொருட்களை எப்போது கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறார்களோ அதற்கு முதல் நாள் மட்டுமே நெல் மூட்டைகளை எடுத்து வந்தால் போதும். அப்போது தான் தங்களது பொருட்கள் இயற்கை சீற்றங்களால் வீணாகாமல் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஆவூர் மற்றும் நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்படும் கூட்டுப் பண்ணை திட்டத்தின் மூலம் ஆவூர் வேளாண் உற்பத்தி குழுவிற்கு 2020-2021 மூலதன நிதி மூலம் பல்வகை தானியம் அடிக்கும் கருவி ஒன்று, சுழல் கலப்பை 2, மற்றும் களை எடுக்கும் கருவி ஆகியவற்றை வழங்கினார்.
மேலும் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் நாடழகானந்தல் கிராமத்தில் கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ளதையும், கரும்பு கரணைகள் நடவு முறையையும் கலெக்டர் பார்வையிட்டு, கரும்பு நடவு செய்தார். அப்போது கலெக்டர் முருகேஷ் நிலத்தில் ஏர் ஓட்டினார்.
வேளாண் இணை இயக்குனர் முருகன், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி, உதவி இயக்குனர் சந்திரன், அலுவலர்கள் பிரியங்கா, சுப்பிரமணி, மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலைய மண்டல மேலாளர் கோபிநாத், துணை மண்டல மேலாளர் பழனி, கண்காணிப்பாளர் சீனிவாசன், கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி, தாசில்தார் வைதேகி, வேட்டவலம் வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டார வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story