நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி மயிலாடுதுறையில், பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி மயிலாடுதுறையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:-
நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி மயிலாடுதுறையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச் செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் காமராஜ், லண்டன் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் சரவணகுமார் வரவேற்று பேசினார்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல், மழையில் நனைந்து விணாகி வருவதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட 165 நெல் கொள்முதல் நிலையங்களையும் நடப்பாண்டில் உடனே திறக்க வேண்டும்.
பயிர்க்காப்பீட்டு தொகை
மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்மணிகளை பாதுகாக்க போதுமான கிடங்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கணக்கில் கொண்டு நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
2020-21-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மாநில நிர்வாகிகள் அய்யாசாமி, சக்திவேல், காசிபாஸ்கரன், கணேசன், விமல், செந்தில்முருகன், தேவி குருசெந்தில், கண்ணகி சஞ்சீவிராமன் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர். முடிவில் நகர செயலாளர் கமல்ராஜா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story