தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்
போடிப்பட்டி
மடத்துக்குளத்தில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர் சங்கத்தினர் (டாக்பியா) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிய கால அவகாசம்
அதன்படி மடத்துக்குளம் வட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் அலுவலகப்பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் நேற்று அலுவலகத்துக்கு விடுப்பு அறிவித்துவிட்டு மடத்துக்குளம் நால்ரோடு அருகிலுள்ள கோவில் வளாகத்தில் அமர்ந்து வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் டாக்பியா செயலாளர் சாமியப்பன், செயலாளர்கண்ணன், பொருளாளர் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் குழுக்கடன் உள்ளிட்ட கடன் குறித்த விவரங்களை உரிய கால அவகாசம் வழங்காமல் கேட்கப்படுவதால் மன உளைச்சலும் பணிச்சுமையும் ஏற்படுகிறது. பெரும்பாலான பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. பல சங்கங்கள் கடந்த 6 மாதங்களாக வரவு செலவு இல்லாமல் முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு வைப்புத்தொகையை திரும்ப வழங்குவதற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் அழுத்தம்
சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்கள் பலரும் தள்ளுபடியை எதிர்பார்த்து நகைகளைத் திருப்பாமல் உள்ளனர். இதன்மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன் களுக்கும் குறியீடு நிர்ணயிக்கப்பட்டு அதிகாரிகளால் இலக்கை அடைய அழுத்தம் கொடுக்கப்பட்டது. தற்போது அதே அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் பல இடங்களில் பணியாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். இவை உள்ளிட்ட நாங்கள் கோரிக்கை விடுத்துள்ள 7 அம்சங்களுக்கும் அரசு தீர்வு காண வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த போராட்டத்தில் சுப்புலட்சுமி, மணிகண்டன், ராமலிங்கம் உள்ளிட்டோர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story