அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2021 9:27 PM IST (Updated: 16 Aug 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போடிப்பட்டி, 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் மடத்துக்குளம் தாலுகா அலுவலகம், வேளாண்மைத்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் ஆகிய 4 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மடத்துக்குளம் வட்டக்கிளைத்தலைவர் மதன் தலைமை தாங்கினார். 
ஆர்ப்பாட்டத்தின் போது தற்போதைய அரசு தேர்தல் வாக்குறுதியாக வழங்கிய பழைய பயனளிப்பு ஓய்வூதியத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தல், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் கோரிக்கையான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், கொரோனாவை காரணம் காட்டி 27 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்குதல், அரசுத்துறையில் காலியாக உள்ள 4½ லட்சம் பணியிடங்களை நிரப்புதல் போன்றவை குறித்த எந்த அறிவிப்பும் தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தனர். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கியதற்கு கண்டனம் தெரிவிப்பதற்கான ஆர்ப்பாட்டம் இது என்று கோஷமிட்டனர்.

Next Story