திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 4 பேர் பலியாகினர்.
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 4 பேர் பலியாகினர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 4 பேர் பலியாகினர்.
79 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,851 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
4 பேர் பலி
இந்த பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 199-ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 81 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 87 ஆயிரத்து 393-ஆக உள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 912 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 4 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 894-ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story