சமூக நீதி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சமூக நீதி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஆக.17-
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 20 சதவீதத்தில், 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை திரும்பபெற வலியுறுத்தியும், இதனை கண்டித்தும் பி.சி, எம்.பி.சி., டி.என்.டி., சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நேற்று திருப்பூர் ரெயில்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சமூகநீதி கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். இதில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சுந்தரவடிவேல் கனகாசலம், குமாரசாமி, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story