திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
x
தினத்தந்தி 16 Aug 2021 10:00 PM IST (Updated: 16 Aug 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
9 லட்சம் பேருக்கு தடுப்பூசி 
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. 
இந்நிலையில் முதலில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டி வந்தனர். இதன் பின்னர் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டவுடன் பொதுமக்கள் உற்சாகமாக தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
கோவிஷீல்டு 
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 99 ஆயிரத்து 555 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 7 லட்சத்து 66 ஆயிரத்து 863 பேர் முதல் டோசும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 692 பேர் 2-வது டோசும் செலுத்தியுள்ளனர். இதில் ஆண்கள் 4 லட்சத்து 70 ஆயிரத்து 179 பேரும், பெண்கள் 4 லட்சத்து 29 ஆயிரத்து 210 பேர். 
இதுபோல் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் 7 லட்சத்து 86 ஆயிரத்து 143. கோவேக்சின் 1 லட்சத்து 11 ஆயிரத்து 458 பேர். மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 56 ஆயிரத்து 922. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4 லட்சத்து 72 ஆயிரத்து 576, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 லட்சத்து 70 ஆயிரத்து 57 பேர் அடங்குவர். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story