கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது


கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 16 Aug 2021 10:10 PM IST (Updated: 16 Aug 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது பல்வேறு தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது.

 மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசின் வழிகாட்டுதலின் படி பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களில் தொற்று எண்ணிக்கை மற்றும் சதவீதம் சற்று அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் தொற்று எண்ணிக்கை மற்றும் சதவீதம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

கூடுதல் கட்டுப்பாடுகள்

இதனால் அப்பகுதிகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இன்று முதல் வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) வரை 10 நட்களுக்கு கூடுதல் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு மாலை 5 மணிக்கு பிறகு அனைத்து கடைகளையும் அடைக்க மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டது. 

அதைத்தொடர்ந்து இன்று முதல் இந்த கூடுதல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது. அதன்படி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போலீசார் மாலை 5 மணியில் இருந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு திறந்து இருந்த அனைத்து கடைகளையும் அடைக்க உத்தரவிட்டனர். 

முன்னதாக போலீசார் மக்கள் கூடும் பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து கடையடைப்பு தொடர்பாக தகவல் தெரிவித்து வந்தனர். 
மேலும் ஓட்டல்களில் மாலைக்கு பிறகு பார்சல்கள் மட்டும் வழங்கப்பட்டன. ஆனால் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது. இதனால் இரவு 9 மணி வரை வழக்கம் போல் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. 

இந்த திடீர் கூடுதல் கட்டுப்பாடுகளால் வியாபாரிகள் பலர் வேதனை தெரிவித்தனர்.

Next Story