பென்னாகரம் வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டுத்துப்பாக்கி மீட்பு


பென்னாகரம் வனப்பகுதியில்  கேட்பாரற்று கிடந்த நாட்டுத்துப்பாக்கி மீட்பு
x
தினத்தந்தி 16 Aug 2021 10:16 PM IST (Updated: 16 Aug 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டுத்துப்பாக்கி மீட்கப்பட்டன.

பென்னாகரம்:
பென்னாகரம் அருகே உள்ள கருங்கல்மேடு ஆஞ்சநேயர் கோவில் எதிரே வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று கேட்பாரற்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது பாறை இடுக்கில் சாக்குபையில் நாட்டுத்துப்பாக்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் நாட்டுத்துப்பாக்கியை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story