குடும்ப தகராறில் கட்டிட மேஸ்திரி தற்கொலை


குடும்ப தகராறில்  கட்டிட மேஸ்திரி தற்கொலை
x
தினத்தந்தி 16 Aug 2021 10:16 PM IST (Updated: 16 Aug 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் அருகே குடும்ப தகராறில் கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பென்னாகரம்:
பென்னாகரம் அருகே குடும்ப தகராறில் கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 குடும்ப தகராறு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏறுப்பள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சின்னபையன். இவருடைய மகன் சக்திகுமார் (வயது 26). கட்டிட மேஸ்திரி. இவருக்கும், தர்மபுரி பகுதியை சேர்ந்த நித்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 
இந்தநிலையில் சக்திகுமாருக்கு மது குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.  நேற்று மதியமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சக்திகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
போலீசார் விசாரணை
இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கட்டிட மேஸ்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story