நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 48 ஆயிரத்தை கடந்தது


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 48 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 16 Aug 2021 10:29 PM IST (Updated: 16 Aug 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 51 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்து உள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 47 ஆயிரத்து 993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால்  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,998 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,049 ஆக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று 64 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 47 ஆயிரத்து 79 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 461 பேர் பலியான நிலையில் 509 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், 3-வது அலையை தடுக்கும் வகையில் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story