பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2021 10:33 PM IST (Updated: 16 Aug 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கலவை

கலைவையை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் இந்திய புரட்சி மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி, அம்பேத்கர் இளைஞர் மன்றம் சார்பில் மத்திய அரசை மத்தியஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய புரட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தை கட்சி வெங்கடேசன், அம்பேத்கர் இளைஞர் அணி பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவண்ணாமலை மாவட்ட இந்திய புரட்சி மார்க்சிஸ்ட் தலைவர் சிவராஜ், செயலாளர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாபு ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் 
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எருவாயு வலையை குறைக்க வேண்டும், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முடிவில் இந்திய புரட்சி மார்க்சிஸ்ட் பொதுக்குழு உறுப்பினர் கந்தசாமி நன்றி கூறினார்.

Next Story