மது பழக்கத்தை கணவர் கைவிடாததால் விஷம் குடித்து பெண் தற்கொலை


மது பழக்கத்தை கணவர் கைவிடாததால் விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 16 Aug 2021 10:39 PM IST (Updated: 16 Aug 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

மது பழக்கத்தை கணவர் கைவிடாததால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

காரைக்கால், ஆக.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு மேல சுப்புராயபுரத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரெஜினா (30). இவர்களுக்கு எபினேஷ் (15) என்ற மகனும், சர்மிதா (13) என்ற மகளும் உள்ளனர்.  இந்த நிலையில் ராமன் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை ரெஜினா கண்டித்து வந்தார். சம்பவத்தன்றும் ராமன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பலமுறை கண்டித்தும் கணவர் திருந்தாததால் மனமுடைந்த ரெஜினா, வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருநள்ளாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று முன்தினம் ரெஜினா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story