பரம்பிக்குளம் அணை 67 அடியை எட்டியது


பரம்பிக்குளம் அணை 67 அடியை எட்டியது
x
தினத்தந்தி 16 Aug 2021 11:04 PM IST (Updated: 16 Aug 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக பரம்பிக்குளம் அணை 67 அடியை எட்டியது. இதை தொடர்ந்து கேரளாவுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி

தொடர் மழை காரணமாக பரம்பிக்குளம் அணை 67 அடியை எட்டியது. இதை தொடர்ந்து கேரளாவுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பரம்பிக்குளம் அணை

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணை கேரள வனப்பகுதிக்குள் இருந்தாலும் பராமரிப்பு, நீர்வரத்தை கணக்கீடுதல், தண்ணீர் திறப்பு உள்ளிட்ட பணிகள் தமிழக பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சோலையார் அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம்-1, சேடல் பாதை வழியாகவும் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதை தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது.

67 அடியை எட்டியது 

பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி, ஆழியாறு அணைகளுக்கு தண்ணீர் திறக்கப் படுகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம்  காலை 67 எட்டியது. 

இதையடுத்து கேரளாவுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 

2-ம் கட்ட எச்சரிக்கை 

பரம்பிக் குளம் அணை 62 அடியை எட்டியதும் முதற்கட்டமாக வும், 67 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் கேரளாவுக்கு விடுக்கப்பட்டு உள்ளது. 

மேலும் பரம்பிக்குளத்தில் இருந்து தூணக்கடவு அணை வழியாக சர்க்கார்பதியில் மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. 


Next Story