ரூ.3 லட்சத்தை ஏமாற்றிய விற்பனை முகவர் மீது வழக்கு


ரூ.3 லட்சத்தை ஏமாற்றிய விற்பனை முகவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Aug 2021 11:38 PM IST (Updated: 16 Aug 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் மோட்டார் சைக்கிள் கடன்தொகையை பொதுமக்களிடம் வசூலித்து நிறுவனத்திற்கு ரூ.3 லட்சத்தை செலுத்தாமல் ஏமாற்றிய விற்பனை முகவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குளித்தலை,
முகவர்
குளித்தலை அருகே உள்ள மேலமணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் குளித்தலை பெரிய பாலம் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் முகவராக பணியாற்றி வந்தார்.
அந்த நிறுவனத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கிய நபர்களிடமிருந்து வண்டி கடன் தொகையை அவர் வசூலித்து வந்துள்ளார்.
வழக்கு
இந்தநிலையில் அவ்வாறு வசூலித்த ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 872-ஐ அவர் தான் வேலை பார்த்த நிறுவனத்தில் செலுத்தாமல் நிறுவனத்தையும், அவரிடம் பணம் கொடுத்த பொதுமக்களையும் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தின் மேலாளர் சந்தோஷ்குமார் குளித்தலை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் குளித்தலை போலீசார் குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story