முத்துமாரி அம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை


முத்துமாரி அம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை
x
தினத்தந்தி 16 Aug 2021 11:50 PM IST (Updated: 16 Aug 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

முத்துமாரி அம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.

ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் அருகே குறிச்சிக்குளத்தில் முத்துமாரி அம்மன் கோவிலில் இரண்டாம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஆவுடையார்கோவில், குறிச்சிக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கிற்கு பூக்கள் வைத்தும், வெற்றிலை, பாக்கு முன்வைத்து குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்தனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Next Story