தினமும் நடைபயிற்சி செல்லும் ஆண்டாள் கோவில் யானை


தினமும் நடைபயிற்சி செல்லும் ஆண்டாள் கோவில் யானை
x
தினத்தந்தி 16 Aug 2021 7:18 PM GMT (Updated: 16 Aug 2021 7:18 PM GMT)

புத்துணர்ச்சிக்காக தினமும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை நடைபயிற்சி செல்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
புத்துணர்ச்சிக்காக தினமும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை நடைபயிற்சி செல்கிறது. 
ஆண்டாள் கோவில் 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால் யதா புத்துணர்வு முகாமில் இருந்து வந்த பிறகு புதிய பாகன்கள் நியமிக்கப்பட்டு யானை நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
யானைக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டு விட கூடாது என்பதை கருத்தில் கொண்டு யானையை கண்காணிப்பு கேமரா மூலம் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.
நடைபயிற்சி 
இந்தநிலையில் ஆண்டாள் கோவில் யானைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் தினமும் அதிகாலை வேளையில் நான்கு ரத வீதி மற்றும் முக்கிய வீதிகளில் நடை பயிற்சிக்கு அழைத்து செல்ல நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தினமும்  அதிகாலையில் நடைபெறும் விசுவரூப தரிசன சிறப்பு பூஜையில் பங்கேற்று விட்டு யானையானது கோவில் பிரகாரம் வழியாக வெளியே வந்து மாடவீதி, நான்கு ரத வீதி உள்பட முக்கிய வீதிகளில் வலம் வருகிறது. அப்போது ஆங்காங்கே உள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யானைக்கு பழங்கள் கொடுத்து வருகின்றனர். யானை கிருஷ்ணன் கோவில் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story