புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 பேர் காயம்


புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Aug 2021 12:51 AM IST (Updated: 17 Aug 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர்.

அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சுழி, நரிக்குடி, கமுதி, ராமேசுவரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், காரியாபட்டி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 
இந்தநிலையில் நேற்று பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் உள்ள மேற்கூரை பெயர்ந்து திடீெரன விழுந்தது. அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த தனியார் பஸ் நேரக்காப்பாளர் பூமிநாதன், டிரைவர் ஆகிய 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. 
புதிய பஸ் நிலையத்தில் அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்படுவதால் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



Next Story