கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 17 Aug 2021 12:57 AM IST (Updated: 17 Aug 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு பகுதியில் மலை வாழ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட தாணிப்பாறை ராம் நகரில் மலைவாழ் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் அத்தி கோவில், பிளவக்கல் அணை, பட்டுப்பூச்சி, ராம்நகர் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் 122  பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் சிவகாசி சுகாதாரத் துறை உதவி இயக்குனரின், நேர்முக உதவியாளர் சீனிவாசன், சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தாசில்தார் இப்ராஹீம் ஷா, கோட்டையூர் வருவாய் ஆய்வாளர் நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார், சந்தனமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சப்-கலெக்டரிடம் மலைவாழ் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனு சம்பந்தமான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து கொடுக்கப்படும் என அவர் கூறினார்.

Next Story