எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 17 Aug 2021 1:00 AM IST (Updated: 17 Aug 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் 5 ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் உள்ள ஊதிய மாற்றத்தை அறிவிக்கக்கோரி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனை அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இணைச்செயலாளர் அழகுசுந்தரம் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட தலைவர் முருகானந்தம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய மாற்றத்தை அறிவிக்கக்கோரி மத்திய அரசையும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தையும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story