முக்கிய கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி
3 நாட்கள் தடைக்கு பிறகு முக்கிய கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சமயபுரம்
3 நாட்கள் தடை
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு பக்தர்கள் அதிகம் கூடும் சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் போன்ற முக்கிய கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் திறக்க தமிழக அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்கமான பூைஜகள் பக்தர்கள் இன்றி நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தநிலையில் அரசின் 3 நாட்கள் தடை முடிவடைந்ததால் சமயபுரம் மாரியம்மன் கோவில் நேற்று காலை 5-30 மணிக்கு திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. ேகாவில் திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். சிலர் முடி காணிக்கையும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்து தீபம் ஏற்றி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். 3 நாட்களுக்கு பிறகு மாரியம்மனை தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மலைக்கோட்டை தாயுமானவர்
இதேபோல, மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில், நாகநாதர் சுவாமி கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் வெக்காளியம்மன், பஞ்சவர்ண சுவாமி கோவில், கமலவல்லி நாச்சியார் கோவில் உள்பட பல்வேறு முக்கிய கோவில்கள் நேற்று திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story