தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ராமேசுவரம்
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனுஷ்கோடி, தேவிப்பட்டினம், மாரியூர், அரியமான் சேதுக்கரை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாகவே தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் ஒரு வாரத்திற்குப் பிறகு ராமேசுவரம் அருகே உள்ள புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதிக்கு நேற்று முதல் மீண்டும் சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து நேற்று காலை ராமேசுவரம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதிக்கு கார், பஸ், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சென்ற சுற்றுலா பயணிகள் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை சாலை பகுதியில் நின்று இரண்டு கடல் சேரும் இடத்தையும் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து புயலால் அழிந்து போன கம்பிப்பாடு பகுதியில் உள்ள கட்டிடங்களையும் பார்த்து ரசித்தனர். தனுஷ்கோடி பகுதிக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகளை நம்பி அங்கு சங்கு, சிப்பி மாலை மற்றும் மீன் கடை வைத்துள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story