ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி


ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
x
தினத்தந்தி 17 Aug 2021 1:21 AM IST (Updated: 17 Aug 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார்.

நெல்லை:

பாளையங்கோட்டை திருமால் நகரை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 48). இவர் உறவினர் வீட்டுக்கு ஒரு ஆட்டோவில் சென்றார். அப்போது எதிரே மற்றொரு ஆட்டோ வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் 2 ஆட்டோக்கள் மோதிக்கொண்டன. இதில் மாரியம்மாள் பயணம் செய்த ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story