இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்


இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்
x
தினத்தந்தி 17 Aug 2021 1:28 AM IST (Updated: 17 Aug 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

15 நாட்களுக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

சாத்தூர், 
15 நாட்களுக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர். 
மாரியம்மன் கோவில் 
 கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் ேநற்று முதல் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. 
இதையடுத்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று காலை பக்தர்கள் திரண்டனர். 
அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, சமூக இடைவெளியை  கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு பூசாரிகள் செய்திருந்தனர்.

Next Story