வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி முதியவர் பலி
காரியாபட்டி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இடிபாடுகள் அமுக்கியதில் முதியவர் பலியானார்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இடிபாடுகள் அமுக்கியதில் முதியவர் பலியானார்.
பழுதாகிய வீடுகள்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா, வெற்றிலைமுருகன்பட்டி கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அப்பகுதி மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
இந்த வீடுகள் தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்தநிலையில ்வெற்றிலைமுருகன் பட்டி கிராமத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
அப்போது அந்த பகுதியில் அய்யாவு (வயது 65) என்பவரது கான்கிரீட் வீட்டின் மேற்கூரை முற்றிலுமாக இடிந்து அய்யாவு மேல் விழுந்தது.
பரிதாப சாவு
இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதேசமயத்தில் அய்யாவு மனைவி மற்றும் பிள்ளைகள் அருகில் உள்ள மற்ெறாரு வீட்டில் இருந்ததால் அவர்கள் தப்பினர். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மிகவும் பழுதடைந்து இருப்பதால் அவற்றை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு ¾ மணி நேரம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story