களக்காடு நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


களக்காடு நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 Aug 2021 1:34 AM IST (Updated: 17 Aug 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

களக்காடு:

களக்காடு பகுதியில் மஞ்சள் காமாலை நோய் பரவி வருவதால் தனியார் டிராக்டர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் தண்ணீரை அதிகாரிகள் பிடித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பியுள்ளனர். இதனைதொடர்ந்து தனியார் டிராக்டர்கள் குடிநீர் வினியோகம் செய்ய நகர பஞ்சாயத்து நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சிதம்பரபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் சீரான குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் களக்காடு நகர பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சுஷ்மா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், முருகன், திருவளன் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சிதம்பரபுரத்திற்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

Next Story