விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 17 Aug 2021 1:37 AM IST (Updated: 17 Aug 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள கொய்யா மாவடியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் மகன் ராபின்சன் (வயது 25). இவரும் மாவடி போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த மாயமுத்து மகன் தொழிலாளியான முகுந்தனும் (20) திருக்குறுங்குடியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு மாவடிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ராபின்சன் ஓட்டினார். 

மலையடிபுதூர் பாலம் அருகே உள்ள இசக்கியம்மன் கோவில் அருகே வந்த போது, நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் திடீர் என கோவில் முன்புள்ள திண்டில் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். ராபின்சன் படுகாயம் அடைந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குறுங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராபின்சனை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முகந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story