இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது
வீரவநல்லூரில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
சேரன்மாதேவி:
நெல்லையை அடுத்த நடுக்கல்லூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் பட்டு மகன் சுப்புக்குட்டி (வயது 32). பிளம்பர். இவரும் வீரவநல்லூர் பரசு தெருவைச் சேர்ந்த உச்சிமாளி மகள் அருணா (32) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அருணா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வீரவநல்லூரில் அருணா நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்து சுப்புக்குட்டி திடீரென்று தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அருணாவை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அருணாவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சுப்புக்குட்டியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story