விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்


விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2021 1:49 AM IST (Updated: 17 Aug 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறி, நேற்று சங்கரன்கோவிலில் உள்ள மாஸ்டர் வீவர்ஸ் சங்க அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் ஹஸ்ரத் பேகம் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் மாலையில் நடந்தது. இதில் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் மாஸ்டர் வீவர்ஸ் சங்கத்தினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு வரையிலும் கூட்டம் நடைபெற்றது.

Next Story