கர்நாடகத்தில் புதிதாக 1,065 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 1,065 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 Aug 2021 2:07 AM IST (Updated: 17 Aug 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 1,065 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 580 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 1,065 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதுவரை 29 லட்சத்து 30 ஆயிரத்து 529 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் 28 பேர் இறந்தனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 7 ஆக உயர்ந்து உள்ளது.

  நேற்று 1,486 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 71 ஆயிரத்து 448 ஆக உள்ளது. 22 ஆயிரத்து 48 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். தட்சிண கன்னடாவில் 284 பேர், பெங்களூரு நகரில் 270 பேர், உடுப்பியில் 107 பேர் உள்பட 1,065 பேருக்கு பாதிப்பு உறுதியானது. தட்சிண கன்னடரில் 5 பேர், பெங்களூரு நகரில் 4 பேர், ஹாசனில், குடகில் தலா 2 பேர் உள்பட மொத்தம் 28 பேர் இறந்தனர். 19 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
  இவ்வாறு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Next Story