ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மீண்டும் விமான சேவை; மங்களூரு விமான நிலையம் அறிவிப்பு


ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மீண்டும் விமான சேவை; மங்களூரு விமான நிலையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Aug 2021 2:18 AM IST (Updated: 17 Aug 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 20-ந்தேதி முதல் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக விமானநிலையம் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மங்களூரு:

மங்களூரு விமான நிலையம்

  தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு காணரமாக ஐக்கிய அரபு நாட்டின் அரசுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்து இருந்தது.

  இதனால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை. மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

விமான போக்குவரத்துக்கு அனுமதி

  இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ஜக்கிய அரபு நாடு, இந்தியாவுக்கு விமான போக்குவரத்துக்கு சில கட்டுப்பாடுகளுடன் கடந்த 5-ந்தேதி முதல் அனுமதி அளித்தது. அதாவது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வர அனுமதி அளிப்பதாக அந்த நாட்டின் அரசு தெரிவித்து உள்ளது.

  ஆனாலும் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமான போக்குவரத்து சேவை தொடங்கவில்லை.

  இந்த நிலையில் நேற்று மங்களூரு விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருந்ததாவது:-

20-ந்தேதி முதல்...

  கடந்த 5-ந்தேதியே ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் இந்திய விமானங்களுக்கு அனுமதி அளித்து இருந்தது. ஆனால் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தொற்று பரிசோதனை செய்ய போதிய வசதிகள் இல்லாததால் இங்கிருந்து விமானம் சேவை தொடங்க தாமதமானது.

  தற்போது மங்களூரு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து வசதிகளும் தயாராகி வருகிறது. இந்த நிைலயில் வருகிற 20-ந் தேதி முதல் மங்களூருவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமான சேவை தொடங்குகிறது. விமானத்தில் பயணிப்பவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story