தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தல்; லாரி பறிமுதல் டிரைவர் கைது


தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தல்; லாரி பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 17 Aug 2021 3:00 AM IST (Updated: 17 Aug 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவரை கைது செய்த சேலம் தனிப்படை போலீசார், 24 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் யெ்தனர்.

பனமரத்துப்பட்டி
ரேஷன் அரிசி கடத்தல்
சேலம் மாவட்டம் மல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் மல்லூரை அடுத்துள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஸ்டேட் வங்கி அருகே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் மூட்டை, மூட்டையாக 18 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
டிரைவர் கைது
விசாரணையில் அவர் மல்லூர் அருகே உள்ள பி.மேட்டூர் கிராமம் பிச்சம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்த விஜய் (வயது 34) என்பதும், குடோனில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கர்நாடக மாநிலம் துன்கூர் பகுதிக்கு கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார். 
இதையடுத்து டிரைவர் விஜயை கைது செய்த போலீசார், 18 டன் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் தனியார் மருத்துவமனை அருகில் உள்ள குடோனில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கும் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 6 டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story