கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த வருவாய்த்துறை அலுவலர்கள்
வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
பெரம்பலூர்:
மத்திய அரசு 1.7.2021 முதல் வழங்கிய அகவிலைப்படி உயர்வை, தமிழக அரசு ஊழியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சரை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் முத்துகுமார் தலைமையில் 144 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இன்றும் (செவ்வாய்க்கிழமை) வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story