தேசியக்கொடியை ஏற்றுவதில் அலட்சியம்


தேசியக்கொடியை ஏற்றுவதில் அலட்சியம்
x
தினத்தந்தி 17 Aug 2021 3:16 AM IST (Updated: 17 Aug 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

தேசியக்கொடியை ஏற்றுவதில் அலட்சியம் செய்யப்பட்டதால் ஊராட்சி அலுவலக வளாகத்தில் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கல்பனா. நேற்று முன்தினம் சுதந்திர தினத்தையொட்டி மதியம் 12 மணியாகியும் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்படாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், தேசிய கொடியை ஏற்றுவதில் அலட்சியம் காட்டுவதாக ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேசியக்கொடியை ஏற்ற வந்த ஊராட்சி மன்ற தலைவர் கல்பனாவை தேசியக்கொடியை ஏற்றவிடாமல், பகல் 12 மணிக்கு மேல் தேசிய கொடியை ஏற்றுவதா என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து செந்துறை  போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story