கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2021 3:25 AM IST (Updated: 17 Aug 2021 3:25 AM IST)
t-max-icont-min-icon

தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:

வேலை நிறுத்தம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும், 283 ரேஷன் கடைகளும் உள்ளன. இதில் 176 பெண் ஊழியர்கள் உள்பட 420 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிைலயில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை 10 மணி முதல் மாலை வரை முழுநேரமும் பணி புறக்கணிப்பு செய்தும், கூட்டுறவு வங்கிகள், ரேசன் கடைகளை அடைத்தும் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் சம்பந்தமாக தமிழக அரசு உடனுக்குடன் கேட்கும் புள்ளி விவரங்களை வழங்குவதற்கு உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். கொரோனா தொற்று கால கட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுனர்களுக்கு இடை நிகழ்வு செலவினமாக நாள் ஒன்றுக்கு ரூ.200 வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் பணியாளர்களுக்கு போதிய ஊதியம் வழங்க வேண்டும். சங்கங்கள் செயல்பட நிதி ஆதாரம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண், மாற்றுத்திறனாளிகள் ஊழியர் நலனை கருத்தில் கொண்டு, கார்டு எண்ணிக்கையை 500 ஆக பிரித்து எளிதாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. மேலும் ேகாரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சங்கத்தின் குன்னம் கிளை சார்பில் குன்னம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. வேலை நிறுத்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். இதில் குன்னம் பகுதியைச் சேர்ந்த 113 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அாியலூர் மாவட்டத்தில்...
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும், 418 ேரஷன் கடைகளும் உள்ளன. இதில் ஏராளமான பணியாளர்கள் ேவலை பாா்த்து வருகின்றனர். இந்நிலையில் ேகாரிக்ைககளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ேவலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

Next Story