அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை


அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
x
தினத்தந்தி 17 Aug 2021 3:27 AM IST (Updated: 17 Aug 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

ஊட்டி

கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று கேத்தி பாரதிநகர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நடைபாதை இல்லை. இதனால் மோசமான பாதையில் முதியவர்கள், குழந்தைகள் நடந்து செல்லும்போது தவறி விழுந்து காயம் ஏற்பட்டு வருகிறது. 

குடிநீர் வசதி இல்லாததால், 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு குடிநீர், நடைபாதை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story