கொள்ளிடத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்


கொள்ளிடத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2021 4:49 PM IST (Updated: 17 Aug 2021 4:49 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம்,

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் நேதாஜி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிள்ளிவளவன், இளவரசி சிவபாலன், ராஜேஸ்வரி சிவகுமார், நெப்போலியன், லெனின், ரமேஷ், பிரேமா முருகேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி தலைவர்களை மிரட்டி பேசுவதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் நியமனத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளிடத்தில் இருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய ஆணையர் மீனாவிடம் வழங்கினர். 

Next Story