கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடி திருவிழா
கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடி திருவிழா நடந்தது
கோவில்பட்டி:
உலக நன்மைக்காகவும், மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெறவும், பொருளாதார வளர்ச்சி பெறவும், கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கவும், விவசாயம் செழிக்கவும், மழை வளம் வேண்டியும், கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு சங்கல்ப பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், பக்தர்கள் அக்னிசட்டிகள், முளைப்பாரிகள், கஞ்சிக்கலங்கள் எடுத்து வழிபட்டனர்.
தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வழிபட்டார்.
பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி ஆர்.சத்யா, அ.தி.மு.க. மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் சீனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story