கிணற்றில் குளிக்க சென்ற முதியவர் தவறி விழுந்து சாவு


கிணற்றில் குளிக்க சென்ற முதியவர் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 17 Aug 2021 6:35 PM IST (Updated: 17 Aug 2021 6:35 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற முதியவர் தவறி விழுந்து இறந்தார்.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற முதியவர் தவறி விழுந்து இறந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 76). இவர், அதே ஊரில் அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான வயல் கிணற்றில் நேற்று  குளிக்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது மகன் பாலாஜி மற்றும் உறவினர்கள் தேடியபோது கிணற்றின் அருகே செருப்பு, உடைகள் காணப்பட்டது. 

இதனால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதினர். கிணற்றில் தண்ணீர் 60 அடிக்கும் மேலாக இருந்ததால் மீட்க முடியவில்லை. 

இந்த நிலையில் இன்று காலை ஆரணி தீயணைப்புத்துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

ஆனால் தண்ணீர் அதிகமாக  இருந்ததால் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றியபின், பிற்பகலில் கணேசனை பிணமாக மீட்டனர். 

இதையடுத்து கண்ணமங்கலம் போலீசார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story