வல்லம் கோட்டை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வல்லம் கோட்டை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயில் நிலையம் அருகே வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவன தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வல்லம் கோட்டை சுவர் கி.பி. 6-ம் நூற்றாண்டில் முத்தரையர் மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த கோட்டை சுவர் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் கருவேல மரங்களால் கோட்டை சுவர் சரியும் அபாயம் உள்ளது. எனவே வல்லம் கோட்டையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி தொல்லியல் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கோட்டை ஆர்ப்பாட்டக்குழுவை சேர்ந்த ஜெகன்சுந்தர்ராஜன் மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story