தஞ்சை மாநகராட்சிக்கு விருது; ஆணையரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஊழியர்கள்
தஞ்சை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது வழங்கப்பட்டதையடுத்து விருது பெற்று வந்த ஆணையரை ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் வருவாயை உயர்த்தியதோடு, சம்பள பாக்கி இல்லாமல் வழங்கியதற்கும் நன்றி தெரிவித்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகராட்சி தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் வழங்கினார். இந்த விருதினை பெற்ற மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நேற்று தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது அவரை மாநகராட்சி அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் விருதுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
மேலும் தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் கட்டப்பட்ட புதிய கடைகளை பொது ஏலம் விட்டதன் மூலம் தஞ்சை மாநகராட்சியின் வருவாயை உயர்த்தியதோடு, அதிகாரிகள் முதல் ஊழியர்களின் 2 மாத சம்பள பாக்கியையும் உடனடியாக வழங்கிய ஆணையருக்கு, நன்றி தெரிவித்தனர்.
மேலும் மாநகராட்சியின் வருவாயை பெருக்கும் வகையில் புதிய பஸ் நிலைய கடைகள் வருகிற 25-ந்தேதியும், அதனைத்தொடர்ந்து விரைவில் காமராஜர் மார்க்கெட் மற்றும் சரபோஜி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளும் பொது ஏலமிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story